சாட்டையை கையிலெடுக்கிறார் மாவை: தமிழ் அரசு கட்சியின் அதிரடி நடவடிக்கையில் சிக்குகிறார்கள் இருவர்!

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குடுமிப்பிடி சச்சரவுகளை தொடர்ந்து, அணி மோதல்களை கட்டுப்படுத்த சாட்டையை கையிலெடுக்கவுள்ளார் கட்சித்தலைவர் மாவை சேனாதிராசா.

இதன்படி, கட்சிக்குள் அணியாக செயற்பட்டு, பிளவை தீவிரப்படுத்திய சுமந்திரன் அணியினர் பலர் மீது சாட்டையை சுழற்ற தீர்மானித்துள்ளதாக தகவல்.

அதேவேளை, தன்னை ஆதரித்திருந்தாவும் கட்சி விதிமுறைகளை மீறி நடந்த சிலரது தலைகளும் உருளவுள்ளதாக அறிய முடிகிறது.

இதன்படி, முதற்கட்டமாக- அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

சுமந்திரனின் வலதுகையாக தற்போது மாறியுள்ள தி.பிரகாஷை தலைவராக கொண்டு செயற்படும், ஹரிகரன் என்ற நபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. சுமந்திரனை தாஜா செய்ய- அவரது முகாமிலில்லாதவர்களை முகநூலில் அவதூறு செய்து வந்ததையடுத்து இந்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

இதேபோல, எம்.ஏ.சுமந்திரன் தரப்பை கடுமையாக விமர்சித்து வந்த தீவகத்தை சேர்ந்த குணாளன் கருணாகரன் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக இருவரிடமும் விளக்கம் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதுதவிர, பொதுத்தேர்தலின் முன்னர் மாவை சேனாதிராசாவை டமேஜ் செய்வதற்கு என்றே சில கூட்டங்களை ஒழுக்கமைத்தவர்கள் மீதும் இரண்டாம் கட்டமாக நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. சுன்னாகத்தில் மாவை சேனாதிராசாவிற்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்ட- எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்ட- கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள், அதில் விசில் அடித்தான் குஞ்சுகள் சிக்கவுள்ளனர்.

கட்சிக்கு எதிராக சதி செய்த முன்னாள் சுன்னாகம் தவிசாளர் தி.பிரகாஷை சுமந்திரன் இப்போது தன்னுடன் வைத்துள்ளார். அவர் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர். சுமந்திரனுக்கு தேர்தல் பிரச்சார பணியை மேற்கொள்வதன் மூலம் அவர் செய்த சதி நடவடிக்கை மன்னிக்கப்படுமா என்பது கட்சிக்குள் மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. (கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் சிங்கள அழகியொருவருடன் உல்லாசமாக இருக்க அழைத்து சென்று, கடன் சொன்ன விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருந்தார்)

பிரகாஷ்- சுமந்திரன்- சுகிர்தன்

சுன்னாகம் கூட்டத்தை ஒழுங்கமைத்தவர் பிரகாஷ். இந்த விவகாரத்தில் தென்மராட்சி அமைப்பாளர் சயந்தனும் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here