பொது இடத்தில் யுவதியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்க முயன்ற நபரால் பரபரப்பு!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் யுவதியொருவரை பொது இடத்தில்- பல பேர் முன்னிலையில் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட காமுகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. சுரங்கப்பாதையில் புகையிரதத்திற்காக காத்திருந்த யுவதியே இந்த அனர்த்தத்தை சந்தித்தார்.

இது குறித்து வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன.

31 வயதான ஜோஸ் ரெய்ஸ் தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட காட்சிகள் கிடைத்ததால், அவரது புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் பிறிதொரு கிரிமினல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்ததால், பொலிசாரால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டார்.

அதே ரயிலில் இருந்தபோது ரெய்ஸை முதலில் கவனித்ததாகவும், அவர் ஏதோ புகைப்பதை கவனித்ததாகவும் பாதிக்கப்பட்ட 25 யுவதி கூறினார்.

அவரிடமிருந்து விலகிச் செல்லும் முயற்சியில் தான் ரயிலில் இருந்து இறங்கியதாக அவர் பொலிசாரிடம் கூறினார். லெக்சிங்டன் அவென்யூ மற்றும் அப்பர் ஈஸ்ட் சைடில் கிழக்கு 63 வது தெரு சுரங்கப்பாதை நிலையத்தில் உள்ள நடைபாதையில் யுவதியை பின்தொடர்ந்து, யுவதியை பாலியல் வல்லுறவிற்கு முயன்றார்.

யுவதியை தள்ளி விழுத்தி, அவர் மீது வல்லுறவிற்கு முயன்றார். இதை ஒருவர் வீடியோ எடுத்தார். இன்னொருவர் அவரை எச்சரித்த போது, சில விநாடி முயற்சியின் பின் அவர் யுவதியை விட்டு விலகி சென்றார். யுவதி எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

தாக்குதல், பாலியல் வல்லுறவு முயற்சி குற்றச்சாட்டை அவர் எதிர்கொள்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here