பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற அங்கத்துவம் பற்றி சட்டமா அதிபர் தீர்மானிக்க முடியாது!

கொலை குற்றவாளியான எம்.பி. பிரேமலால் ஜெயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கலாமா இல்லையா என்பதை தீர்மானிக்க சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பாக ஒரு முடிவை சபாநாயகர் அல்லது பாராளுமன்றத்தால் மட்டுமே எடுக்க முடியும், ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கின் எல்லைக்குள் செயல்படுவதால் நீதிமன்றங்களுக்கு ஆஜராக வேண்டுமா இல்லையா என்பதை மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர தனது மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளதால், மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இறுதி முடிவு வரும் வரை அவருக்கு தண்டனை வழங்குவதற்கான ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது சட்டமா அதிபரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் வாசுதேவ நானாயக்காரர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர பாராளுமன்ற அமர்வுகசட்டமா அதிபர் திணைக்களம் நாடாளுமன்ற பொதுச்செயலாளர் மற்றும் நீதி அமைச்சுக்கு தெரிவித்ததற்கு பதிலளிக்கும் வகையில் இதனை தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன வெள்ளிக்கிழமை (28), பிரேமலால் ஜெயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள வசதியேற்படுத்தும்படி  சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

செப்டம்பர் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டில் கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இரத்னபுரி உயர் நீதிமன்றம் பிரேமலால் ஜெயசேகரவுக்கு ஜூலை 31 அன்று மரண தண்டனை விதித்தது.

இருப்பினும், ஜெயசேகர ஓகஸ்ட் 05 அன்று பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். மாவட்டத்தில் இரண்டாவது அதிக விருப்பு வாக்கை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here