இதுவும் ஒரு பேருந்து நிலையம்!

மஸ்கெலிய பிரதேச சபைக்கு உற்பட்ட மொக்கா பேருந்து தரிப்பிடம் மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் இப்பகுதி மக்கள் போக்குவரத்தின் போது பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட குறித்த பேருந்து தரிப்பிடம் மூன்று வருடங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது .

இப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகள் காட்மோர் மஸ்கெலிய போன்ற இடங்களுக்கு செல்வதற்காக குறித்த இடத்தில் ஒன்று கூடுவது வழக்கமாகும் .
தற்போது பேருந்து தரிப்பிடம் பழுதடைந்து காணப்படுவதால் மழை காலங்களில் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்குவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இதன் அருகாமையில் உயர்தர பிரிவு பாடசாலை ஒன்றும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஒருவரும் இப்பகுதியிலே வசித்து வருகிறார்.

எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி பேருந்து தரிப்பிடம் ஒன்றை அமைத்து தர பொறுப்பானவர்கள் முன் வர வேண்டும்.

-சாமிமலை நிருபர் S.ஞானராஜ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here