அச்செழு பாடசாலை நிர்வாக சீர்கேட்டிற்கு எதிராக ஆளுனர் செயலகத்தின் முன்பாக போராட்டம்!

யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றதுடன் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வலயக்கல்விப் பணிப்ப்ளர்,மாகாண கல்வி அமைச்சு போன்றவர்களிடம் நடவடிக்கை எடுக்கப்படத்தான் காரணமாக இன்று ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பாடசாலையில் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களை இடமாற்றம் செய் தமிழர் ஆசிரியர் சங்கமே தவறான ஆசிரியர்களை தவறாக வழிநடத்தாதே வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளே ஊழல் புரிவோரை பாதுகாக்காதே வலயக்கல்விப் பணிப்பாளரே ஆசிரியர்களை தூண்டி அரசியல் செய்யாதே மாணவர்களின் உணவுப் பொருட்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடு போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அலுனர்செயலகத்தில் கையளித்தனர்.மேலும் தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து விரைவாக தீர்வினை வடக்கு மாகாண ஆளுநர் பெற்றுத்தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here