உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை பிரிவில் முன்னிலையாகிய ரணில், அகிலவிராஜ்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில், முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரனில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசம் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

அறிக்கையை பதிவு செய்ய ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன் ஆஜராகுமாறு ரணிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் பொருத்தமான திகதியை மாற்றம் செய்யுமாறு அறிவித்து, இன்று முன்னிலையாகியுள்ளார்.

இதற்கிடையில் அகில விராஜ் கரியவசம் விசாரணை ஆணைக்குழுவில் ஏற்கனவே ஒரு அறிக்கையை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here