முருகன் சிலைக்கு சிங்களவர் கடும் எதிர்ப்பு: மாதம்பை தோட்டத்தில் பதற்றம்!

இறக்குவாணை மாதம்பை தேட்டம் ஸ்டோர் கடை பிரதேசத்தில் தமிழ் தோட்ட தொழிலாளர்களால் வைக்கப்பட்ட முருகன் சிலையை அகற்ற வேண்டுமென அந்த பகுதியிலுள்ள சிங்களவர்கள் கலவர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை முதல் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, ஹபுகஸ்தென்ன பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான மாதம்பை தோட்டத்தின் தோட்ட குடியிருப்புகளுக்கு அருகாமையில் தோட்டக்காணியில் அந்த பகுதி மக்களால் முருகன் சிலை வைக்கப்பட்டது. இதையடுத்து கொந்தளித்துள்ள சிங்களவர்கள், முருகன் சிலையை அகற்ற வேண்டுமென மிரட்டி, எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக மாதம்பை தோட்ட இளைஞர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாளின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, அவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முதித பிரசாந்தி சொய்சா இரு தரப்பினரையும் இன்று அழைத்து சமரச பேச்சில் ஈடுபடவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here