சொந்த இடங்களில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகளிற்கு இடமாற்ற யோசனை!

தமது சொந்த பிரதேசங்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றுவது குறித்து பொலிஸ் தலைமையகம் பரிசீலித்து வருகிறது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சிறப்பு சோதனைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் முன்கூட்டியே கசிவதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் சிலரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து,  சில பொலிஸ் அதிகாரிகளால் தெரிவிக்கப்படுவது குறித்த தகவல்களை பொலிஸ் தலைமையகம் கண்டறிந்துள்ளது.

இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கும், சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளை மேலும் முறைப்படுத்துவதற்கும் இதுபோன்ற இடமாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இந்த இடமாற்றங்கள் முதலில் மேற்கு மாகாணத்தில் செய்யப்பட உள்ளன. இது தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here