ஒரேநாளில் உலகில் அதிக கொரோனா தொற்றாளர்கள்: கொரோனா மையமாகிறது தென்னாசியா!

கொரோனா வைரசினால் ஒரேநாளில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா பதிவானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 79,457 பேர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

ஒரு நாளில் உலகில் அதிகமானவர்கள் தொற்றிற்குள்ளான சந்தர்ப்பம் இதுவாகும். கொரோனா தொற்றின் மையம் இடம்மாறி தற்போது தெற்காசய வட்டகைக்கு மாறும் அறிகுறிகள் தென்படுகிறது.

ஜூலை 16 ஆம் திகதி அமெரிக்காவில் 77,299 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருந்தனர். இதுவே, உலகில் ஒரேநாளில் அதிகமானவர்கள் தொற்றிற்குள்ளான சந்தர்ப்பமாக இருந்தது.

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, 3.54 மில்லியன் தொற்றாளர்களுடன், அமெரிக்காவையும் பிரேசிலையும் தொடர்ந்து தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் நேற்று 960 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 64,617 ஆக  உயர்ந்துள்ளது. நேற்று இந்தியாவிலேயே அதிக உயிரிழப்பு பதிவானது.

உலகளவில் நேற்று 4,182 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 850,163 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here