பெற்றோரை இழந்த இரட்டையர்களிற்கு பொலிஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்: நெகிழ்ச்சி சம்பவம்!

பெற்றோரை இழந்து அநாதரவான நிலைமைக்கு ஆளான 8 வயதான இரட்டையர்களை சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்ப நானுஓயா பொலிசார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (30) அவர்களின் பிறந்ததினம்.

நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் விஜேசுந்தர, இரட்டையர்களுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அவர்களிற்கு புத்தாடை வழங்கி, கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்பாராத இந்தசம்பவத்தால் இரட்டையவர்கள் மிக நெகிழ்ச்சியடைந்தனர்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய செய்திகளே நாளாந்தம் வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், இந்த பொலிஸ் அதிகாரியின் செயலை பாராட்டலாமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here