கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணிக்கும் சீன நிறுவனமும் அமெரிக்காவின் கருப்பு பட்டியலில்!

சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி (சி.சி.சி.சி) நிறுவனத்தை அமெரிக்கா கருப்பு பட்டியலில் இணைத்தது ஆசியாவில் சீர்குலைவை ஏற்படுத்துமென இராஜதந்திர நோக்கர்கள் தெரிவித்துள்ளதாக சீனாவின் மோர்னிங் போஸ்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா கருப்பு பட்டியலில் இணைத்துள்ள சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி, தற்போது உலகமெங்கும் 157 நாடுகளில் 923 திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் துறைமுக நகர திட்டத்தையும் அதுவே நடைமுறைப்படுத்துகிறது.

சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி மற்றும் துணை நிறுவனங்கள், அதனுடன் கூட்டு சேர்ந்த உள்ளூர் நிறுவனங்களையும் பொருளாதாரத்தடை எவ்விதம் பாதிக்கப் போகிறது என்பதை உடனடியாக கணிக்க முடியா விட்டாலும், ஆசிய பிராந்தியத்தில் உடனடி தாக்கம் ஏற்படலாமென கணிக்கப்படுகிறது.

மலேசியாவின் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு, இலங்கையில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் போர்ட் சிட்டி, மற்றும் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு வெளியே 10 பில்லியன் அமெரிக்க டொலர் விமான நிலையம் ஆகியவை சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி (சி.சி.சி.சி) நடைமுறைப்படுத்தும் வெளிநாட்டு திட்டங்களில் அடங்கும்.

சீனாவின் பல பில்லியன் டொலர் பெறுமதியான உள்கட்டமைப்பு திட்டங்களில் சி.சி.சி.சி பங்கேற்றதன் காரணமாக ஆசிய பொருளாதாரங்களில், அந்த நிறுவனம் உட்பொதிந்துள்ளது.

சி.சி.சி.சி கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்டதன் மூலம், அந்த நிறுவன திட்டங்களுடன் தொடர்புடைய நாடுகள் நெருக்கடியை சந்திக்கலாம்.

இலங்கையில் சி.சி.சி.சியின் இருப்பு கடந்த காலங்களில் சர்ச்சையைத் தூண்டியது. 2018 ஆம் ஆண்டில் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், நிறுவனத்தின் துணை நிறுவனமான சீனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்திடமிருந்து சுமார் 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் 2015 ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரச்சாரத்திற்கு விநியோகிக்கப்பட்டது.

ராஜபக்ஷ அந்த தேர்தலில் தோற்றார். ஆனால் அவரது சகோதரர் கோதபய ராஜபக்ஷ கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.

சி.சி.சி.சி மற்றும் ராஜபக்சக்கள் நியூயோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள். போர்ட் சிட்டி திட்டத்தைத் தவிர, ராஜபக்ஷக்களின் கோட்டையான ஹம்பாந்தோட்டையிலும் சீனா ஹார்பர் ஒரு துறைமுகத்தை கட்டியது.

சீனா நடைமுறைப்படுத்தும் Belt and Road திட்ட மூலோபாயம் குறித்து மேற்கத்திய விமர்சகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். சீனாவின் இந்த உள்கட்டமைப்பு திட்டம்   “கடன்-பொறி இராஜதந்திரத்தின்” ஒரு பகுதியாக உள்ளது என குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்கா கருப்பு பட்டியலில் இணைத்த 24 சீன நிறுவனங்களில் ஐந்து சி.சி.சி.சி துணை நிறுவனங்கள் அடங்கும். அமெரிக்க வர்த்தகத் துறை புதன்கிழமை இந்த அறிவிப்பை விடுத்தது. இது து உரிமங்கள் இல்லாமல் அமெரிக்க இறக்குமதியைப் பெற நிறுவனங்களுக்கு தடை விதிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here