யாழ்-கொழும்பு சொகுசு பேருந்துகளில் உரிய கட்டண நடைமுறை இல்லை

யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையில் சேவையில் ஈடுபடும் அதிசெகுசு பேருந்துகளில் உரிய கட்டண அறவீடு இல்லை என அறியமுடிகிறது.

யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையில் சேவையில் ஈடுபடும் அதிசெகுசு பேருந்துகள் பல தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடனும் அனுமதி இன்றியும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த பேருந்துகளில் முறையான கட்டண அறவீடுகள் இல்லை என அறியமுடிகிறது.

குறிப்பாக போக்குவரத்து சேவையை வழங்கும் பேருந்துகளில் கட்டண விபரம் காட்சிப்படுத்தல் வேண்டும் இருப்பினும் அதிசொகுசு பேருந்துகளில் அவ்வாறு காட்சிப்படுதப்படுவதில்லை.

அதனைவிட யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பேருந்துகள் கிளிநொச்சி மாங்குளம் வவுனியா போன்ற இடங்களில் ஏறுகின்ற பயனிகளிடம் தமக்கு விருப்பமான தொகை பணத்தை அறவிடுவதோடு சிலர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் தொகையை அறவிடுகின்றனர்.

அதேபோன்று. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்துகளிலும் கிளிநொச்சி மாங்குளம் வவுனியா போன்ற இடங்களுக்கு செல்கின்ற பயனிகளிடம் தமக்கு விருப்பமான தொகை பணத்தை அறவிடுவதோடு சிலர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் தொகையை அறவிடுகின்றனர்.

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏனைய பேருந்து சேவைகள் போன்று பயணிக்கும் இடங்களுக்கு ஏற்ற வகையில் கட்டணங்களை அறவிடவேண்டும் என்றும் பயணிகள் தெரிவிக்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here