பேஸ்புக் விருந்தில் கலந்து கொண்டவர்களிற்கு விளக்கமறியல்!

அக்மீமன பகுதியில் பேஸ்புக் வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 28 இளைஞர்களும் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து பல்வேறு வகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

18 முதல் 27 வயதுக்குட்பட்ட இந்த இளைஞர்கள் கொழும்பு, மாத்தளை, அனுராதபுரம், வென்னப்புவ மற்றும் அம்பாறையை சேர்ந்த இளைஞர்களே கைதாகினர்.

போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here