காணாமல் போனோர் தினத்தில் முல்லைத்தீவில் போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாளான இன்று முல்லைத்தீவு பேருந்து நிலையத்திற்கு முன்பாக இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் மாவட்ட செயலகம் முன்பாக சென்றடைந்துஅங்கு கவயயீர்ப்பினை முன்னெடுத்துள்ளார்கள்.

முன்னதாக காணாமல் ஆக்கப்பட்ட உறுவுகளை தேடி உயிரிழந்த பெற்றோர்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

கொடிய பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும்,சர்வதேச நீதிவேண்டும், காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம், காணாமலாக்கப்பட்டோர் கண்டறிய சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும், சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ளப்படவேண்டும், கலப்புப் பொறிமுறை வெறும் கண்துடைப்பு, போன்ற பதாதைகளை தாங்கியவாறு மாவட்ட செயலகம் வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான அவசர தேவைகருதி இலங்கையில் உள்ள ஜக்கியநாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் ஊடாக ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை வாசிக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here