தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையிலிருந்து தப்பித்த 80 வயது மூதாட்டி சிக்கினார்!

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய மூதாட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய 80 வயதான மூதாட்டி பேருவளையில் தனிமைப்படுத்தல் மையமான ஹொட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர், மனநோய்க்கான அறிகுறிகள் அவரில் தென்பட்டதையடுத்து, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் 28ஆம் திகதி காலை முதல் அவர் காணாமல் போயிருந்தார்.

இதையடுத்து துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அந்த மூதாட்டி களுத்துறையிலிருந்து கேகாலைக்கு பேருந்தில் சென்றது தெரிய வந்தது.  அங்கு கடையொன்றிற்குள் மூதாட்டி நுழைந்துள்ளார்.

அவர் பற்றிய தகவல் கிடைத்ததும் சுகாதார அதிகாரிகள் அவரை பொறுப்பேற்றனர்.

அவர் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அதன் முடிவுகள் வெளியாகும் வரை கடையின் 7 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடை கிருமி நீக்கம் செய்யப்பட்டு, தற்காலிக ஊழியர்களுடன் நேற்று (29) மீள இயங்க ஆரம்பித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here