நேற்று கண்டியில் ஏற்பட்டது நிலநடுக்கமா?

கண்டி மாவட்டத்தில் ஹரகம, மைலாபிட்டி மற்றும் திகன பகுதிகளில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. நிலநடுக்கத்தை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக இலங்கையின் புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த சம்பவம் பூகம்பம் அல்ல என்று தெரிவித்துள்ளது. கண்டி பல்லேகல பகுதி மையம் ஒரு நில அதிர்வு சமிக்ஞையை பதிவு செய்துள்ளது என்றும் இது இயற்கையான நிகழ்வு அல்ல என்றும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.

நாட்டிலுள்ள மற்ற நான்கு நில அதிர்வு அளவீட்டு மையங்களில் பூகம்பம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், கண்டியில் பதிவான சமிக்ஞையை ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரிகள் குழு இன்று பல்லேகல பகுதிக்கு செல்லவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here