தவராசா, சரவணபவன் உள்ளிட்ட 7 பேரை கட்சியை விட்டு நீக்க கோரிய சுமந்திரன்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டவர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன் கடிதமொன்றை விநியோகித்தார். தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உதயன் பத்திரிகை விநியோகித்த பாணியில் இந்த சம்பவம் நடந்தது.

இந்த கடிதத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான கே.வி.தவராசா, ஈ.சரவணபவன் மற்றும் மகளிர் அணி பிரமுகர்கள், இளைஞரணியினர் சிலரை கட்சியை விட்டு நீக்கும்படி கோரியிருந்தார்.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பலர் இந்த கடிதம் பற்றி குறிப்பிட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் தொடக்கம் விக்னேஸ்வன் வரை பலர் வெளியேறியதற்கு சுமந்திரனின் நடவடிக்கைகளே ஒரே காரணம். கட்சியில் இருப்பவர்களையும் வெளியேற்றினால், சுமந்திரன் அணியினர் மட்டுமா கட்சியில் இருக்கலாம் என கேள்வியெழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here