விவேகானந்தரின் விஜயமே- சர்ச்சை போஸ்டரை ஒட்டிய விஜய் ரசிகர்கள்!

விவேகானந்தரைப் போல விஜய் உடையணிந்து இருக்கும் புகைப்படம் மதுரையில் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக விஜய்யை முன்னாள் முதல்வர்கள் போலவும், மகான்கள் போலவும் வடிவமைத்து போஸ்டர்கள் ஒட்டுவது வழக்கம். கடந்தவாரம் விஜய்யை எம் ஜி ஆர் போலவும், அவர் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் வடிவமைத்த போஸ்டர் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் இப்போது விஜய்யை விவேகானந்தர் போல வடிவமைத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர் மதுரை விஜய் ரசிகர்கள்.

அதில் ‘நாடு நலம் பெற 100 இளைஞர்கள் வேண்டும் என்றார் விவேகானந்தர்; தளபதி! உன்னிடம் இருப்பதோ பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள்” எனக் ‌குறிப்பிட்டதுடன் ‘விவேகானந்தரின் விஜயமே வருக.. நல்லாட்சி தருக..’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here