வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயத்தை சுவீகரித்த ஐயனார் விளையாட்டுக்கழகம்

வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயத்துக்கான மாபெரும் கடினப்பந்து போட்டி இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஐயனார் விளையாட்டுக்கழகம் கின்னத்தை சுவீகரித்ததுக்கொண்டது.

ஐயனார் விளையாட்டுக்கழகத்திற்கும் ஜங்ஸ்ரார் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நான்காவது வருடமான இடம்பெற்று வருகின்றது.

ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ஐயனார் விளையாட்டுக்கழக அணியின் தலைவர் அனுசன் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி துடுப்பெடுத்தாடிய ஜங்ஸ்ரார் விளையாட்டுக்கழக அணியினர் 29.02 பந்து பரிமாற்றங்களுக்கு முகம்கொடுத்து தனது சகல இலக்குகளையும் பறிகொடுத்து 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் ஐயனார் விளையாட்டுக்கழகம் சார்பாக கவிராஜ் நான்கு இலக்குகளையும், சத்தியராஜ் 03 இலக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

93 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐயனார் விளையாட்டுக்கழகம் 12.05 பந்து பரிமாற்றத்திற்கு மாத்திரம் முகம் கொடுத்து மூன்று இலக்குகளை இழந்து 95 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் மிதுன் 42 ஓட்டங்களையும், அனுசன் 26 ஓட்டங்களையும் பெற்று அணியினை வெற்றிக்கு வழிவகுத்தமை குறி்ப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் வினோநோகராதலிங்கம், கு.திலீபன் மற்றும் கலாநிதி
வ.விஜிதரன் ஆகியோரால் வெற்றி கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here