‘தண்ணியடிக்க’ போன இடத்தில் தகராறு: முழங்காலில் உட்கார வைக்கப்பட்டு தாக்கப்பட்ட இளைஞர்கள்!

வெல்லவாய, ஹண்டபனகல பகுதியில் நேற்று (28) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்ததாக வெல்லவாய பொலிசார் தெரிவித்தனர்.

நவகமுவாவிலிருந்து கட்டராகம பகுதிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு ஹண்டபனகல பகுதியில் தரித்து, மதுபான விருந்து வைத்துள்ளனர். இதன்போது இரண்டு கிராமவாசிகளைத் தாக்கி அவர்களின் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ஹடபனகல பகுதி கிராம மக்கள் சுற்றுலாப் பயணிகளை சுற்றிவளைத்து தாக்கி, முழங்காலில் உட்கார வைத்துள்ளனர்.

இரண்டு கிராமவாசிகளையும் தாக்கிய சில இளைஞர்களை மட்டுமே, கிராமவாசிகள் தாக்கியுள்ளனர். ஏனையவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

காயமடைந்த 6 பேரும் மொனராகல பொது வைத்தியசாலை மற்றும் ஹடபனகல பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெல்லவாய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here