பிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மன் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்

பிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மன் (43) புற்றுநோய் பாதிப்பால் அமெரிக்காவில் உயிரிழந்தார்

சர்வதேச அளவில் புகழ் பெற்ற பிளாக் பாந்தர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சட்விக் போஸ்மன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மரணமடைந்துவிட்டதாக அவரது பிரதிநிதி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அவர் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள வீட்டில் இருக்கும் போது தான் உயிர் பிரிந்தது. அவர் அருகில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.

சட்விக் போஸ்மன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் இதுவரை பொதுவெளியில் தனக்கு புற்றுநோய் இருப்பது பற்றி அவர் எப்போதும் பேசியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here