பயணிகளை ஏற்றிக்கொண்டு எரிபொருள் நிரப்ப செல்லும் தனியார் பேருந்துகளின் வழித்தட அனுமதி இரத்து!

பயணிகளை ஏற்றியபடி எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு சென்று, எரிபொருள் நிரப்பும் தனியார் பேருந்துக்களின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என மேல் மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருள் நிரப்ப பயணிகளை அழைத்துச் செல்வது மிகவும் ஆபத்தானது என்று அதன் தலைவர் ஓ.கே.டபிள்யூ.பிரசன்ன சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

பேருந்துகளுக்கு எரிபொருளைப் பெறுவதற்காக பயணிகளுடன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குச் செல்வது கடுமையான குற்றம். பேருந்துகளுக்கு தேவையான அளவு எரிபொருளை தினசரி அடிப்படையில் முன்கூட்டியே பெறுவது பேருந்து ஊழியர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் குறித்து மேல் மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபை மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும், அவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here