‘‘ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறேன்’’- ஷின்சோ அபே அறிவிப்பு

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜப்பானில் அரசியல் குடும்பத்தில் பிறந்த ஷின்சோ அபே (65). ஜப்பானின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான பிரதமர் ஷின்சோ அபே அதிக காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையை கொண்டுள்ளவர். ஜப்பானின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைய உதவிய தலைவர் என்ற பெருமையையும் கொண்டவர்.

சில ஆண்டுகளாக, குடல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இரண்டு முறை மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் அபே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் ‘‘எனக்கு உடல்நல பாதிப்பு மோசமடைந்துள்ளதால் நாட்டை வழிநடத்துவதில் சிக்கல் உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு ஏற்ப செயல்பட முடியவில்லை. எனவே எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன்.’’ எனக் கூறினார்.

கடந்த 2007ம் ஆண்டு உடல் உபாதை காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

எனினும் ஜப்பானில் மீண்டும் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துவதாகக் கூறி 2012ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here