தனியார் காணியை இராணுவ முகாமிற்கு சுவீகரிக்க அனுமதித்தது கரவெட்டி பிரதேச செயலகம்!

கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குள் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணியை இராணுவமே சுவீகரக்க பச்சைக் கொடி காட்டியுள்ளது கரவெட்டி பிரதேச செயலகம்.

கரவெட்டி பிரதேச செயலகத்தின் காணி பயன்பாட்டு குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. பிரதேச செயலாளர் தயாரூபன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், காணி சுவீகரிப்பிற்கான அனுமதியை பிரதேச செயலகம் வழங்கியது.

ஆயம் சந்தியிலுள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணிகளை உரிய நிர்வாக நடைமுறைகளின்படி இராணுவம் சுவீகரிக்க பிரதேச செயலகம் அனுமதியளித்தது.

அந்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதால் இராணுவத்தின் முகாம் அவசியமென பிரதேச செயலக வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனியார் காணிகளில் இராணுவம் குடியிருப்பதும், சுவீகரிக்க முனைவதற்கும் எதிராக தமிழ் மக்கள் அரசியல்ரீதியாக போராடி வரும் நிலையில், கரவெட்டி பிரதேச செயலகம் தனியார் காணியை இரர்ணுவத்திற்கு வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here