வல்லை முனியப்பர் ஆலயத்திற்கருகில் வர்த்தக கட்டட தொகுதி: கரவெட்டி பிரதேசசபைக்கு காணி ஒதுக்கீடு!

வல்லை முனியப்பர் ஆலயத்துடன் வர்த்தக கட்டட தொகுதி அமைக்க காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச செயலகத்தின் காணி பயன்பாட்டு குழு கூட்டம் இன்று (28) கூடியபோது இதற்கான காணி, கரவெட்டி பிரதேசசபைக்கு ஒதுக்கப்பட்டது.

வல்லை முனியப்பர் ஆலயத்தை சூழ வர்த்தக நிலையங்கள் அமைந்து வருவதால், அவற்றை முறைப்படுத்தி, வர்த்தக கட்டட தொகுதி அமைக்க 10 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது.

இதுதவிர, வல்லை இராணுவ முகாமிற்கு அண்மையாக 10 ஏக்கர் காணி, சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்திற்காக கரவெட்டி பிரதேசசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்டானில் மேலும்  ஏக்கர் காணி கழிவு மீள்சுழற்சி செயற்பாட்டிற்காக கரவெட்டி பிரதேசசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here