நாடாளுமன்றத்தில் விநியோகிக்கப்படும் மதிய உணவின் உண்மையான பெறுமதி வெளியானது!

நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படும் மதிய உணவின் பெறுமதியை சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான செயலமர்வின் போது நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் மதிய உணவின் பெறுமதி குறித்த சர்ச்சையேற்பட்டது.

மதிய உணவின் பெறுமதி 3,000 ரூபா எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களிற்காக 200 ரூபாவிற்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வளவு பெரிய செலவு தேவையில்லையென்றும், குறிப்பிடப்படும் பெறுமதிக்கு ஏற்றதாக உணவின் தரம் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டது.

இதை தொடர்ந்து உணவு சர்ச்சை சூடு பிடித்திருந்தது.

இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவின் உண்மையான பெறுமதியை சபாநாயகர் அறிவித்தார். இந்த சர்ச்சையையடுத்து, உணவின் பெறுமதி கணக்கிடப்பட்டதாகவும் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படும் மதிய உணவின் பெறுமதி 296 ரூபா ஆகும். அது 200 ரூபாவிற்கு வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here