இரண்டு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

பாடசாலையில் இரண்டு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரவக்க பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.

தரம் 5 மாணவர்களிற்கு கற்பிக்கும் 5 வயதான ஆசிரியர் ஒருவர் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிடப்படுகிறது.

பாடசாலை நேரத்திலேயே இந்த சம்பவங்கள் நடந்துள்ளது.

மாணவிகள் இதை தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டு மொரவக்க நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை திங்கள்கிழமை (31) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here