கடலில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் இறுதி அஞ்சலிக்கு சென்றதால், பழிவாங்கப்பட்ட தோட்ட தொழிலாளர்கள்!

பூண்டுலோயா ஹெரோ கீழ்பிரிவு தோட்ட துரைமார்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி தொழிலாளர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூண்டுலோயா ஹெரோ தோட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடல் அலையில் அள்ளுண்டுச்சென்று உயிரிழந்ததையடுத்து முழு தோட்டமுமே சோகத்தில் மூழ்கியது. இறுதிக்கிரியைகள் நடைபெற்ற தினத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாது, அஞ்சலி செலுத்தினர்.

இதனால் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் தோட்ட நிர்வாகம், வெளியில் இருந்து ஆட்களை அழைத்துவந்து கொழுந்து கொய்துள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தோட்டத்துரையிடம் தொழிலாளர்கள் வினவியபோது, தாம் அப்படித்தான் நடப்போம், விரும்பினால் வேலை செய்யுங்கள், இல்லாவிட்டால் போங்கள் என எகத்தாளமாக பதிலளித்துள்ளார்.

எனினும், தோட்டதுரை தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார் எனவும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பெரிய துரை, சின்னதுரை ஆகிய இருவரையும் மாற்றவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here