புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதிய தவிசாளர் அ.தவகுமாரன் கடமைகளை பொறுப்பேற்றார்

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதிய தவிசாளராக அ.தவகுமாரன் இன்று (28) தனது கடமைகளை பெறுப்பெடுத்துள்ளார்.

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆழுகையின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் போது இருவர் தவிசாளர் பதவி நிலையினை வகிப்பதாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைவாக ஏற்கனவே இருந்த தவிசாளர் செ.பிறேமகாந் கடந்த 14.08.2020 அன்று பதவி விலகியதை தொடர்ந்து புதிய தவிசாளராக கடந்த 22.08.2020 அன்று வர்த்தகமானியில் அ.தவகுமாரன் பெயர் வெளியிடப்பட்டது

இந்நிலையில் இன்று காலை சுப வேளையில் தனது கடமைகளை பெறுப்பேற்றுள்ளார்.

இதன்போது பிரதேச சபையின் உத்தியோகத்தர்களுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here