மாத்தளை நகரசபை மேயர் நீக்கம் சட்டவிரோதமானது!

மாத்தளை நகரசபை மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விதம் சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆளுனர் தனது அதிகார எல்லைக்கு வெளியில் சென்று அதிகாரம் செலுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேயர்களை பதவி நீக்குவதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

வத்தளை, மபொல, மாவனெல்ல உள்ளூராட்சி மன்றங்களிலும் இது போன்ற மீறல் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் நேற்று வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில், மாத்தளை மேயராக தல்ஜித் அலுவிஹர செயல்படுவதை தற்காலிகமாக நிறுத்தும் உத்தரவை, உடனடியாக அமல்படுத்தி உத்தரவிட்டார்.

மாகாண சபைகள் சட்டம் எண் 1989ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாணசபைகள் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

துணை மேயர் சந்தனம் பிரகாஷ் இடைக்கால மாத்தளை மேயராக செயற்படுவார் என அந்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here