தெரிவு செய்யப்பட்ட சில இடங்களிற்கு விமான சேவைகளை மீள இயக்க ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஏயார்லைன்ஸ் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி இத்தாலியின் மிலான், பிரித்தானியாவின் லண்டன், ஜப்பானின் டோக்கியோ, மாலைதீவின் மாலே, ஜேர்மனியின் பிராங்போர்ட், பிரான்சின் பாரிஸ், அவுஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய விமான நிலையங்களிற்கு, இலங்கை எயார்லைன்ஸ் விமானங்கள் தொடர்ச்சியாக இயக்கப்படவுள்ளன.
இந்த இடங்களுக்கு பயணிக்க விரும்பும் பயணிகள் கொழும்பு, காலி அல்லது கண்டியில் உள்ள விமான அலுவலகங்களை அல்லது ஒன்லைனில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று இலங்கை ஏயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.