கொம்பனித் தெரு புகையிரத பாதைக்கு மேலாக மேம்பாலம்

கொம்பனித்தெரு புகையிர நிலையத்திற்கு அருகாமையில் உத்தராநந்த மாவத்தையில் புகையிரத பாதைக்கு மேலாக மேம்பாலம் நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உத்தராநந்த மாவத்தை மற்றும் நீதிபதி அக்பர் மாவத்தை ஊடாக ரயில் பாதை அமைந்துள்ளதால் அலுவலக நேரங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தீர்வாக, மேம்பாலம் நிர்மாணித்து, ஒரு திசையில் வாகனங்கள் செல்லும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், இதன் கீழ் 3 மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்காக, பொருத்தமான உள்ளூர் ஒப்பந்தக்காரர்களிடமிருந்து கேள்வி மனுக்களை கோருவதற்காக, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here