100 அடி மரத்தில் ஏறி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண்!

பலாங்கொட பிரதேச வளாகத்தில் உள்ள 100 அடி உயரமான மரமொன்றில் ஏறி பெண்ணொருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பலாங்கொட, தியவின்ன, ஹடகிரிய பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 37 வயதான பெண்ணொருவரே இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.

தான் வசிக்கும் நிலத்தை சட்டபூர்வமாக தனக்கு வழங்கும்படி கோரி அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொட பிரதேச செயலாளர் ஹேமந்த பண்டாரா தெரிவித்தார்.

இருப்பினும், அவர் மற்றொரு நிலத்தை வழங்கிய போதிலும், அவர் அதற்கு உடன்படவில்லை என்று அவர் கூறினார்.

பின்னர் பொலிசாரின் தலையீட்டையடுத்து அவர் மரத்திலிருந்து இறங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here