ரணில் தரப்புடன் புலம்பெயர் குழுவிற்கிருந்த கள்ள உறவு: ஆணைக்குழுவில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த இரண்டு புலம்பெயர்ந்த தமிழர்களை, அந்த பட்டியலில் இருந்து நீக்க முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழுத்தம் தந்ததாக இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் சாட்சியமளித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த கிரித்தலை இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்த, இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரியான லெப்டினன்ட் கேணல் ஷம்மி குமாரரட்ன இந்த தகவலை வெளியிட்டார்.

உலகத்தமிழர் பேரவையென்ற பெயரில் இயங்கிய இம்மானுவேல் பாதிரியார், சுரேன் சுரேந்திரன் ஆகியோரின் பெயர்களை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இம்மானுவேல் பாதிரியார் தற்போது யாழில் தங்கியுள்ளார். சுரேன் சுரேந்திரன் பிரித்தானியாவில் குடியிருக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் எம்.ஏ.சுமந்திரன் தரப்பை முன்னிலைப்படுத்த இந்த குழு பெருமளவு நிதியை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here