ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக மேலும் சிலருக்கு அழைப்பு!

2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் பொலிஸ் பிரிவின் முன் ஆஜராக அரசியல்வாதிகள் சிலர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நாளை (28) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் அகில விராஜ் கரியவசம் திங்கள்கிழமை (31) வரவழைக்கப்பட்டார்.

ஐ.தே.கவின் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மரசிங்க, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டாரா செப்டம்பர் 02 ஆம் திகதி முன்னிலையாக கோரப்பட்டுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் செப்ரெம்பர் 03 அன்று அறிக்கைகளை பதிவு செய்வார்கள்.

செப்டம்பர் 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மாஇராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம ஆகியோர் ஆஜராவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here