‘குடும்ப கௌரவத்தை பாதுகாக்கவே யுவதியை கொலை செய்தோம்’: யாழ் யுவதி கொலை வழக்கில் மாமா அதிர்ச்சி வாக்குமூலம்!

மருமகளின் தகாத உறவினால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்பதாலேயே அவரை கொன்றோம் என அசால்ட்டாக வாக்குமூலமளித்துள்ளார், மன்னாரில் யுவதியை கொலை செய்த பிரதான சந்தேகநபரான, அவரது மாமா.

நெடுந்தீவை சேர்ந்த யுவதி டொறிக்கா ஜூயின் (21) கடந்த 13ஆம் திகதி மன்னார் சௌத்பார் அருகே, உப்பளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலம் அடையாளம் காணப்படாமலிருந்த நிலையில், சிசிரிவி கமராக்களின் உதவியுடன் பொலிசார் நடத்திய விசாரணையில், உணவகம் ஒன்றில் உணவருந்திய 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்,கடந்த 22 ஆம் திகதி யுவதியின் சகோதரி மற்றும் பெரிய தாயின் மகளின் மனைவி ஆகியோர் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது கணவருடன் சகோதரிக்கு எற்பட்ட முறையற்ற தொடர்பை நிறுத்த பல முறை சொல்லியும் கேளாமல் அது தொடர்ந்ததால், கொலையை செய்ததாக உயிரிழந்த யுவதியின் சகோதரி தெரிவித்தார்.

யுவதி கடந்த 11 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் இரவு மன்னார் சௌத்பார் பகுதிக்கு நடந்து சென்றுள்ளர்.

கொலை செய்யப்பட்ட யுவதி, யுவதியின் சகோதரி, அவரது பெரிய தாயின் மகனின் மனைவி மற்றும் தாய் மாமன் ஆகியோர் மன்னார் சௌத்பார் புகையிரத வீதியை நோக்கி நடந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையிலே குறித்த பகுதியில் கொலை சம்பவம் நடந்ததுடன், யுவதியின் சடலம் உப்பளம் பகுதியில் உள்ள பாத்தியில் வீசப்பட்டுள்ளது.

எனினும் சடலம் 13 ஆம் திகதி காலையிலே அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான குறித்த யுவதியின் தாய் மாமனார் தலைமறைவாகி இருந்தார்.

இந்த நிலையில் மன்னார் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் பிரதான சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நேற்று மாலை இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, யுவதியை கொலை செய்ததை ஏற்றுக்கொண்டார்.

மருமகளின் நடவடிக்கையினால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படு் என்பதாலேயே அவளை மன்னாருக்கு அழைத்து சென்று கொலை செய்தோம் என தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த யுவதியும், கைதான இரு பெண்களும், தானும் மன்னாருக்கு பேருந்தில் சென்றதாகவும், உயிரிழப்பதற்கு முன்னதாக யுவதிக்கு கைதான இரண்டு பெண்களும் சேடாவில் நஞ்சு கலந்து கொடுத்ததாகவும், உப்பள பகுதிக்கு நடந்து சென்றபோது யுவதி மயங்கி விழுந்ததாகவும், அதையடுத்து அவரை அடித்துக் கொன்று தண்ணீருக்குள் வீசினோம். அவரை கொல்லும் எண்ணம் எனக்கு இருக்கவி்லை. வெளிநாட்டுக்கு அனுப்பும் நோக்கத்துடனேயே நான் இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here