பனைகளை வெட்டுவதைத் தடுக்க கடும் சட்டம்; வீட்டுத் தோட்டங்களுக்கு 4 மில்லியன் தென்னை கன்றுகள்; மண்சரிவு பிரதேசங்களில் கித்துல் செய்க!

கித்துல் மற்றும் பனையை பிரதான ஏற்றுமதி பயிர்களுடன் சேர்த்து அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறை ஒன்றை ஆரம்பிப்பதற்கான இயலுமையை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கித்துல் மற்றும் பனை பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்கும் அவற்றுக்கான தடைகளை நீக்கி உற்பத்தி செயற்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கும் உடனடியான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

கித்துல் பயிருக்காக அரச நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் பனை மரம் வெட்டுவதை தடை செய்யும் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் பணிப்புரையை விடுத்தார்.

தென்னை, கித்துள், பனை மற்றும் இறப்பர் செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த பொறிமுறை பண்டங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயங்களை  சுட்டிக்காட்டினார்.

அதிக அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ள இராஜாங்க அமைச்சாக இந்த அமைச்சின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தியதுடன், குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள வேண்டிய இலக்கைத் தயார் செய்யுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

வருடாந்த உள்நாட்டு தேங்காய் உற்பத்தி 3 பில்லியன்களாகும். அதில் 1.8 பில்லியன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிக ஏற்றுமதிக்காக பயிரிடுவதை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட இனங்காணப்பட்டுள்ள காணிகளில் உடனடியாக தென்னை பயிச்செய்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
காணி பயன்படுத்தல் திணைக்களத்தின் மூலம் இனங்காணப்பட்டுள்ள கைவிடப்பட்ட வயல் நிலங்களும் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படும்.

செப்டெம்பர் மாதத்தில் 2 மில்லியன் வீட்டுத் தோட்டங்களுக்கு 4 மில்லியன் தென்னங் கன்றுகளை பயிரிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ குறிப்பிட்டார்.

தேங்காய்க்கான நிர்ணய விலை தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது. கலப்பின விதைகளை பயிரிடுவதன் மூலம் கூடிய விளைச்சலை பெற்றுக்கொள்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

இறப்பர் ஏற்றுமதியினால் வருடாந்தம் பெறும் வருமானம் 600 மில்லியன் டொலர்களாகும். அதனை 2020ஆம் ஆண்டில் 2022 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இறப்பர் பயிர்ச் செய்கையில் புதிய இனங்களை அறிமுகப்படுத்துவதற்கும் பள்ளமான பிரதேசங்களில் பைனஸ் மரத்திற்கு பதிலாக இறப்பர் மரங்களை பயிரிடுதல் தொடர்பாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு இறப்பர் பயிர்ச் செய்கை மற்றும் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக இறப்பர் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பசில் ராஜபக்க்ஷ சுட்டிக்காட்டினார்.

இறப்பர் சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் உள்நாட்டிலிருந்து கொள்வனவு செய்யும் இறப்பர் தொகைக்கு இணையாக இறப்பர் இறக்குமதிக்கும் பொறிமுறை ஒன்றை திட்டமிட வேண்டுமென்று பசில் ராஜபக்க்ஷ மேலும் குறிப்பிட்டார்.

ஏற்றுமதி செய்யப்படும் கேப் இறப்பர் ஏனைய நாடுகளின் உற்பத்திகளுக்காக பயன்படுத்தும் வழிமுறையை கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றியும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ, எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பயிர்ச் செய்கை, உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here