லம்போர்கினி சூப்பர் டிராபியோ ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி வீரர் பிரதமருடன் சந்திப்பு!

வரலாற்றில் முதல் முறையாக அரச அனுசரணையுடன் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள சர்வதேச சாம்பியன் பட்டம் வென்ற டிலந்த மாலகமுவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

லம்போர்கினி சூப்பர் டிராபியோ ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச சாம்பியன் பட்டம் வென்ற டிலந்த மாலகமுவ இன்று (26) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

36 ஆண்டுகளாக இலங்கைக்கு பெரும் புகழை பெற்றுக்கொடுத்த சர்வதேச சாம்பியன் பட்டம் வென்ற டிலந்த மாலகமுவ இம்முறையும் சாம்பியன் பட்டத்தை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு அவருக்கு ஆசி கிட்ட வேண்டும் என பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த போட்டி செப்டம்பர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை ஜேர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
சர்வதேச சாம்பியன் பட்டம் வென்ற டிலந்த மாலகமுவவிற்கு அரச அனுசரணை கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதற்காக கடுமையாக போராடிய டிலந்த மாலகமுவ பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கும், இந்நடவடிக்கையை செயற்படுத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை சுற்றுலா சபைக்கு தமது நன்றிகளை தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின்போது மாலகமுவ அவர்களின் ஆலோசகர்களாக செயற்பட்டுவரும் மென்டர் ஹில்சிங்கர் நிறுவனத்தின் துமிந்து தாப்ரேவ், அருண ஸ்ரீ வருஷஹென்னதிகே மற்றும் துலிந்த பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here