அனர்த்தம் ஏற்படமுன் தடுப்பது பற்றிய கலந்துரையாடல்

அனர்த்த நிலைமைகளின் போது கடும் அனர்த்தத்தை எதிர்கொள்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட் 9 கிராம அலுவலர் பிரிவுகளில் அனர்த்தம் தொடர்பான முன்னாயத்த வேலைத்திட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில்

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் மற்றும் ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு ,துணுக்காய் பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் ஒட்டுசுட்டான் ,மாந்தை கிழக்கு ,துணுக்காய் பிரதேச சபைகளின் உடைய செயலாளர்கள், தவிசாளர்கள் மூன்று பிரதேச செயலகங்களிலும் தெரிவு செய்யப்பட்ட 9 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த கிராம அலுவலர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்

குறித்த திட்டமானது அனர்த்த நிலைமைகளின் போது கடும் அனர்த்தத்தை எதிர்கொள்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு ,துணுக்காய் பிரதேச செயலகங்களின் கீழ் தலா 3 கிராம அலுவலர் பிரிவுகளாக 9 கிராம அலுவலர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு அனர்த்தத்தை எதிர்கொள்ளும் குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் அனர்த்தம் வருமுன் காக்கும் முகமாக செய்யக்கூடிய வேலைத்திட்ட்ங்கள் தொடர்பில் கலந்துரையாடி அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டமாக எதனை செய்ய முடியும் என்பது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here