உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ஓட்டம்: தினேஷ் சந்திமால் சாதனை!

இலங்கை உள்நாட்டு கிரிக்கெட் போட்டியல் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்ட சாதனையை தினேஷ் சந்திமால் இன்று புதுப்பித்தார்.

இலங்கை பரீமியர் லீக்கில் அதிகபட்ச ஓட்ட சாதனையை கிருத்துவன் விதானகே வசம் இதுவரை இருந்து வந்தது. இன்று ஆட்டமிழக்காமல் 354 ஓட்டங்களை தினேஷ் சந்திமால் குவித்தார்.

இராணுவ அணி சார்பில் விளையாடி வரும் சந்திமால், சரசென்ஸ் எஸ்சிக்கு எதிராக இந்த ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் இராணுவ அணி முதல் இன்னிங்கில் 8 விக்கெட் இழப்பிற்கு 642ஓட்டங்களை பெற்றது.

391 பந்துகளை சந்தித்த சந்திமால் 9 சிக்சர், 33 பவுண்டரிகளுடன் 354 ஓட்டங்களை குவித்தார்.

Top 10 இலங்கையின் முதல்தர ஆட்ட ஓட்டங்கள்

மஹேல ஜெயவர்த்தன 374 (Test)
தினேஷ் சந்திமால் 354*
கித்ருவான் விதானகே 351
மினோட் பானுக 342
திலின கண்டம்பி 340*
சனத் ஜெயசூர்யா 340 (Test)
குஷல் ஜனித் 336
குமார் சங்கக்கார 319 (Test)
உதார ஜயசுந்தர 318
ரமேஷ் மெண்டிஸ் 300

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here