யுவதியிடம் பாலியல் இலஞ்சம் பெற வந்த பொலிஸ் அதிகாரியை மடக்கிப்பிடித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!

பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் பெற வந்தபோது, உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

ஹொரண பொலிஸ் நிலைய உப பொலிஸ் அதிகாரியொருவரே உல்லாசத்திற்கு வந்து உபத்திரவத்தில் சிக்கியுள்ளா்.

கோனெபொலவை சேர்ந்த யுதியொருவரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது. மோட்டார் சைக்கிளை விற்பனை செய்த நிதி நிறுவனம், யுவதியிடம் பொலிஸ் அறிக்கையை கோரியிருந்தது.

இதன்படி ஹொரணை பொலிஸ் நிலையத்தில் தனக்கு தேவையான ஆவணத்தை பெறுவதற்கு யுவதி சென்றபோது, ஆவணம் வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார் குறிப்பிட்ட உப பொலிஸ் பரிசோதகர்.

இதன்படி இன்று இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட இடமொன்றிற்கு பொலிஸ் அதிகாரி கோரிய பாலியல் இலஞ்சத்தை வழங்க யுவதி அழைத்திருந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரியை அதிகாரிகள் கையும் மெய்யுமாக மடக்கிப்பிடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here