இன்று 11 பேருக்கு தொற்று!

இலங்கையில் இன்று 11 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, இதுவரை 2,982 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு மறுவாழ்வு மையத்தின் கைதிகள் 10 பேர், கென்யாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை,மேலும் 3 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் தொகை 2,819 ஆக உயர்ந்துள்ளது.

இரணவில மருத்துவமனையில் இருந்து இரண்டு பேர் விடுவிக்கப்பட்டனர். தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்திலிருந்து ஒருவர் வீடு திரும்பினார்.

அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 1,040 பேர், வெளிநாட்டிலிருந்து திரும்பிய இலங்கையர்கள்.

ஐந்து வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 151 பேர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர், அதே நேரத்தில் வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 83 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here