டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்டுகள் சாய்த்த முதல் வேகப்பந்து வீச்சாளரானார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன். 156 டெஸ்ட்களில் அண்டர்சன் இந்த மைல்கல்லை எட்டினார்.
3வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கப்டன் அசார் அலியை வீழ்த்தியதன் மூலம் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளரும் உலக அளவில் 4வது வீச்சாளருமாகத் திகழ்கிறார் அண்டர்சன்,
இலங்கையின் முத்தையா முரளிதரன் 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள். ஷேன் வோர்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 705 விக்கெட்டுகள். இந்தியாவின் அனில் கும்ப்ளே 132 டெஸ்ட்களில் 619 விக்கெட். அண்டர்சன், 156 டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகள்.
டெஸ்ட் அரங்கில் குறைந்த பந்துகளில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தியதில் முத்தையா முரளிதரன் 33,711 பந்துகளில் வீழ்த்தியதையடுத்து அண்டர்சன் 33,717 பந்துகளில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வோர்ன் 34,919 பந்துகளிலும் கும்ப்ளே 38,496 பந்துகளிலும் 600 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினர்.
இந்நிலையில் ஜேம்ஸ் அண்டர்சன் இந்தச் சாதனை குறித்துக் கூறும்போது, ஆஷஸ் தொடரில் நான் இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் விரும்புகிறார். இந்த டெஸ்ட்டில் வீசியதைப் பார்க்கும் போது என்னிடம் திறமை வற்றவில்லை என்று தெரிகிறது. என்னால் முடியும் என்று உணரும் வரை தொடர்வேன்.
நான் 700 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.. ஏன் முடியாது? என்றார் அண்டர்சன்.