ஈழவிடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன்.சிவகுமாரனின் பிறந்ததின நிகழ்வு!

ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது வித்து பொன்.சிவகுமாரனின் 70 ஆவது பிறந்த தினம் இன்று நினைவு கூரப்பட்டது.

சிவகுமரன் நினைவுதின ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் இடம்பெற்றது.

ஏற்பாட்டு குழுவில் உறுப்பினர் செந்தூரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் சிவகுமாரனின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்பாட்டிலும் காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here