சாம்பல்தீவில் தமிழ் மக்களிடமிருந்து காணி பறிப்பதை நிறுத்தக் கோரினார் சம்பந்தன்!

திருகோணமலை சாம்பல்தீவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட 300 ஏக்கர் பகுதிக்குள் அடங்கியுள்ள தனியார் காணி உரிமையாளர்களிற்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் அசங்க அபயவர்த்தனவை, இரா.சம்பந்தன் நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்தார்.

இன்று மதியம் இந்த சந்திப்பு இடம்பெற்றத.

சாம்பல்த்தீவுக் களப்புப் பகுதியில் 360 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து வர்த்தமானியிட வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இந்த பகுதிக்குள் தமிழ் மக்கள் பலரின் உறுதிக் காணிகளும் அடங்குகின்றன. தமது காணிகளிற்குள் எந்த நடவடிக்கையும் செய்யக்கூடாதென்றும், மீறி செயற்பட்டால் கைது செய்யப்படுவார்கள் எனவும் தமிழ் மக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த தடையை நீக்கி காணி உரிமையாளர்கள் தாம் விரும்பும் பணிகளை செய்ய ஆவண செய்ய வேண்டும் என இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here