ஹாலிவுட்டுக்குப் போன நடிகர் ஜி.வி.பிரகாஷ்

ஹாலிவுட்டுக்குப் போன நம்மாளு!2/19/2020 2:57:53 PM
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் ‘டிராப்சிட்டி’. இதன் நாயகன் பிராண்டன். இந்தப் படத்தை ரிக்கி பர்செல் இயக்கியுள்ளார். டெல்.கணேசன் தயாரித்துள்ளார். ஹாலிவுட் அனுபவம் பற்றி ஜி.வி.பிரகாஷிடம் கேட்டோம்.

டிராப்சிட்டி?

படத்தின் ஹீரோ பிராண்டன் ஒரு பெரிய ராப் சிங்கர். அவர் அவரது வறுமை காரணமாக சட்ட விரோத செயலில் ஈடுபடுகிறார். அவர் சந்திக்கும் விளைவுகள் என்ன என்பதுதான் படத்தின் கதை. இதில் நான் சர்ஜனாக நடித்துள்ளேன். இந்தப் படத்தில் பெரிய பெரிய ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர். நம்மூர் நடிகர்களும் இருக்கிறார்கள். இந்தப் படம் எனக்கு ஹாலிவுட்டில் அங்கீகாரத்தைக் கொடுக்கும். ஏனெனில், தமிழை விட ஆங்கில மார்க்கெட் 200% அதிகம்.

இந்தப்படம் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. பிராண்டன் நல்ல மனிதர். அவரும் ஒரு மியூசிக் லவ்வர். ஹாலிவுட் மாதிரி இடங்களில் தொடர்ந்து பயணிக்க ஆசை இருக்கிறது. அதற்கான முயற்சிகளும் நடக்கின்றன. தயாரிப்பாளர் டெல்.கணேசன் இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘டெவில்ஸ் நைட்’, ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ படங்களை தயாரித்துள்ளார். இந்தப் படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்.

தமிழ்ப் படத்துக்கும் ஹாலிவுட் படத்துக்கும் என்ன வித்தியாசம்?

அதை கம்பேரே பண்ண முடியாது. எனக்கு ஹாலிவுட் படத்தில் ஒரு நன்மை நடந்தது. கதையை முன்பே என்னிடம் கொடுத்து விட்டார்கள். அதனால் படத்தை முழுவதுமாக உள்வாங்க முடிந்தது. மேலும் படப்பிடிப்பிற்குச் செல்லும் முன்பு பக்காவாக ஒத்திகை நடக்கும். அது படப்பிடிப்புக்கு போகும்போது கான்பிடன்ட் கொடுக்கும். இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளேன். இது பக்கா மியூசிக்கல் மற்றும் திரில்லர் படமாக இருக்கும்.

கான்செர்ட் அமெரிக்காவில் பண்ணுவீங்களா?

350க்கும் மேல் பாடல்கள் பண்ணி இருக்கிறேன். அதனால் நிச்சயம் கான்செர்ட் பண்ணுவேன்.

அடுத்து?

வசந்தபாலன் சார் இயக்கிய ‘ஜெயில்’ முதலில் ரிலீஸாக இருக்கிறது. ‘ஐங்கரன்’, எழில் சார் இயக்கத்தில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘சூரரைப் போற்று’, ‘வாடிவாசல்’ படங்களுக்கு இசை அமைத்துள்ளேன். ‘டிராப் சிட்டி’ படம் மூலம் ஹாலிவுட் சினிமாவில் என்ட்ரி ஆவதை ஒரு நல்ல நகர்வாகப் பார்க்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here