பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி உடன்படிக்கை அமைச்சரவைக்கு!

யாழ்ப்பாணம் பாலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசுடன் கையெழுத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகருடன் சுற்றுலா அமைச்சில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் அமைச்சர்  இதனைத் தெரிவித்தார்.

இரு தரப்பிற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும், அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன் பலாலி விமான நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பாலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கைக்கு 300 மில்லியன் ரூபா மானியம் வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here