வில்லியாக நடிக்கும் சமந்தா…..

பேமிலி மேன் என்ற வெப்தொடரில் வில்லியாக நடிக்கிறார், சமந்தா.  இதுவரை எந்த படத்திலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்காத அவர், தற்போது வெப்சீரிஸில் வில்லியாக நடிப்பதால், அவருக்கு இந்த வேடம் சரிப்பட்டு வராது என்று இணையதளத்தில் ரசிகர்கள்  விமர்சித்து வருகிறார்கள். இதற்கு பதிலளித்த சமந்தா கூறுகையில், ‘இந்த  கேரக்டரை என்னால் செய்ய முடியாது என்று யாராவது சொன்னால், உடனே அந்த கேரக்டரில்  நடிக்க நான் முன்னுரிமை தருவேன். அதை செய்து முடித்துக் காட்ட வைராக்கியம்  கொள்வேன். அப்படித்தான் எனக்கு வில்லி கேரக்டர் செட்டாகாது என்ற  விமர்சனத்தை எதிர்கொண்டேன்.
அதற்காகவே பேமிலி மேன் என்ற வெப்தொடரில் வில்லி  கேரக்டரை தேர்வு செய்தேன். வில்லி என்றாலும், அதன்  எல்லை எது என்று எனக்கு தெரியும். காரணம், நான் அக்கினேனி நாகார்ஜூனாவின் மருமகள். அந்த மரியாதையை எந்த நிலையிலும் நான் காப்பாற்றுவேன். ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான  கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். கவர்ச்சி நடிகை, பேமிலி  நடிகை, கமர்ஷியல் நடிகை என்று எந்த குறுகிய வட்டத்திற்குள்ளும் சிக்காமல்  இருப்பதற்கு இந்த தேர்வே காரணம்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here