சிறுமியை துஷ்பிரயோகம் செய்து பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு தலைமறைவான இளைஞனை கையடக்க தொலைபேசி காட்டிக் கொடுத்தது!

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து, குடும்பம் நடத்தி விட்டு தலைமறைவான 22 வயது இளைஞனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரபையினர் கைது செய்துள்ளனர்.

பெற்றோருடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, 2019 ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி கண்டியிலுள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றார்.

பேருந்தில் பயணித்தபோது அறிமுகமான இளைஞனுடன் அறிமுகம் ஏற்பட்டு இருவரும் காதல் வசப்பட்டனர்.

ஓரிரு வாரத்தில் சிறுமியை தெல்கொட பகுதிக்கு அழைத்து சென்ற இளைஞன், அங்கு குடும்பம் நடத்தியுள்ளார். சில நாட்கள் சிறுமியுடன் உல்லாசமாக இருந்த பின்னர், கோட்டை பேருந்து நிலையத்தில் சிறுமியை அநாதரவாக கைவிட்டு விட்டு தலைமறைவாகினார்.

அநாதரவாக நின்ற சிறுமி மீட்கப்பட்டார். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு பெண் குழந்தையை பிரசவித்தார்.

தன்னை ஏமாற்றியவனின் தொலைபேசி இலக்கத்தை சிறுமி வைத்திருந்தார்.

கையடக்க தொலைபேசி இலக்கத்தின் மூலம் இளைஞன் அடையாளம் காணப்பட்டான். சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தின் பழக்கடையொன்றில் பணியாற்றி வந்தான்.

அவனை கைது செய்ய அதிகாரிகள் வந்த போது கோயிலை சுற்றி தப்பியோட முயன்றான். எனினும் அங்கிருந்தவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டான்.

நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here