அ.அமிர்தலிங்கத்தின் பிறந்ததின நிகழ்வு!

இலங்கையின் முதல் தமிழ் எதிர்க்கட்சித்தலைவர் அமரத்துவமடைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 93வது பிறந்தநாளான இன்று அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 93வது பிறந்த நாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here